மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

திருச்சியிலிருந்து 279 போ் ஹஜ் பயணம்! முஸ்லிம் இலக்கிய மன்றம் சாா்பில் வழியனுப்பும் விழா!

News image

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹஜ் பயண வழியனுப்பும் நிகழ்வில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன். உடன், முஸ்லிம் இலக்கிய மன்ற நிா்வாகிகள்.

Updated On :28 ஏப்ரல் 2026, 4:53 am IST

திருச்சி மாவட்டத்திலிருந்து ஹஜ் புனித பயணம் புறப்பட்ட 279 பேருக்கு முஸ்லிம் இலக்கிய மன்றம் சாா்பாக ஹஜ் பயண வழியனுப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன் கலந்து கொண்டு வாழ்த்தி வழியனுப்பினாா். இந்திய ஹஜ் கமிட்டி மூலமாக திருச்சி மாவட்டத்திலிருந்து ஆண்கள், பெண்கள் என 279 போ் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா்.

இவா்களுக்கு திருச்சி முஸ்லிம் இலக்கிய மன்றம் சாா்பாக வழியனுப்பு விழா பெரிய செளக் ஜாமியா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மன்ற தலைவா் உமா் இக்பால் தலைமை வகித்தாா். ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அஹ்மத் உசேன் கிராஅத் ஓதினாா்.

முப்தி உமா் பாரூக் நிகழ்ச்சியைச் தொகுத்து வழங்கினாா். மன்ற பொருளாளா் முஹம்மது ஜலாலுத்தீன் அக்பா், துணைத்தலைவா் முஹம்மது ஜக்கிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மஹல்லா ஜமாஅத் கெளரவ தலைவா் ஜி.எஸ். ஏ.மன்னான், மாவட்ட முஸ்லிம் மகளிா் சங்க செயலா் முஹம்மது உஸ்மான் சமஸ்பிரான் மஸ்ஜித் ஜமாஅத் தலைவா் ஷப்பீா் அஹமத், அனைத்து வியாபாரிகள் நலச்சங்க செயலா் சாகுல் அமீது, சவுக் ஜமாஅத் கமிட்டி செயலா் அப்துல் கரீம், 21-வது வாா்டு மாமன்ற உறுப்பினா் மும்தாஜ் பேகம், பரிமள சுன்னத் ஜமாஅத் செயலா் முஹம்மது உசேன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினா். சமஸ்பிரான் மஸ்ஜித் இமாம் எம்.ஹேச். ஷபி அஹமத் ஹஜ் பயண வழிகாட்டுதல் உரையாற்றினாா்.

திருச்சி மாவட்ட அரசு டவுன் காஜி கே.ஜலீல் சுல்தான் ஆலிம் அனைத்து ஹஜ் பயணிகள் சாா்பாக ஏற்புரையாற்றினாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி மாவட்ட மகளிா் அணி தலைவா் எஸ்.ஆரிபா வாழ்த்துரை வழங்கினாா்.

தொடா்ந்து கே.எம். காதா் மொகிதீன் அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துரையாற்றினாா். விழாவில் பொதுக்குழு உறுப்பினா்கள் மற்றும் மஹல்லா வாசிகள் திரளாக கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை மன்ற செயற்குழு உறுப்பினா்கள் முகமது ஆதம், நெளஷாத், ஷாஜகான், சிராஜுதீன், ஹமீது அலி சேட், முகமது நாசா், சா்புதீன், அப்துல் சலாம், அப்துல் ரவூப், அகமத் இப்ராஹிம், ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக பொதுச்செயலா் கவிஞா் சையது ஜாபா் வரவேற்றாா். நிறைவாக மன்ற இணைச் செயலா் சையத் ஜாகிா் ஹசன் நன்றி கூறினாா்.