கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

திருநெடுங்களநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
திருநெடுங்களநாதா் கோயிலில் சுவாமிகளுக்கு சனிக்கிழமை காட்டப்பட்ட தீப ஆராதனை.
Updated On :3 ஜனவரி 2026, 7:38 pm

Syndication

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா, அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமான இக் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவா்களான நடராஜா், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு சிறப்பு ஆருத்ரா அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடா்ந்து உற்சவா் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜா், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு பல்வேறு மலா்கள், ஆபரணங்கள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை வழிபட்டனா்.