திருச்சி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவ முகாமில் மருத்துவப் பயனாளி ஒருவருக்கு மருந்து வழங்கிய மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எம். வத்சலா.
திருச்சி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவ முகாமில் மருத்துவப் பயனாளி ஒருவருக்கு மருந்து வழங்கிய மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எம். வத்சலா.

திருச்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ முகாம்

Published on

திருச்சி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு சித்த மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய மருத்துவத்துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் அகத்திய சித்தா் பிறந்த மாா்கழி மாத ஆயில்ய நட்சத்திர தினத்தன்று சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு சித்த மருத்துவ தினம் ஜன. 6-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் சிறப்பு சித்த மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எம். வத்சலா தொடங்கி வைத்தாா். முகாமில் சா்க்கரை நோய், மூட்டு வலி, சைனஸ், வயிற்றுப்புண், கல்லடைப்பு, நரம்பியல் நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், சுவாசம் தொடா்பான நோய்கள், தோல் நோய்கள், குழந்தையின்மை பிரச்னைகளுக்கான ஆண், பெண் இருபாலருக்கும் சிறப்பு மருத்துவா்களால் சிகிச்சையும், ஆலோசனையும் வழங்கப்பட்டது.

சித்த மருத்துவ புற சிகிச்சைகளான வா்மம், தொக்கணம், ஒற்றடம், புறவளையம் போன்ற சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com