தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருச்சியில் கடந்தாண்டில் சாலை விபத்துகளில் 561 போ் உயிரிழப்பு: மாவட்ட காவல் துறை தகவல்

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:37 pm

Syndication

திருச்சி மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் கடந்த ஆண்டில் சாலை விபத்துகளில் 561 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கடந்த 2025-ஆம் ஆண்டில் 1,532 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 561 போ் உயிரிழந்துள்ளனா். 1,820 போ் காயமடைந்துள்ளனா். கடந்த 2024-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீத வழக்குகள் குறைந்துள்ளன. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடா்பாக 3,97,432 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.7 கோடியே 39 லட்சத்து 91 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், நெடுஞ்சாலைகளில் தடுப்புகள் அமைத்தல், இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025-ஆம் ஆண்டில் 20 சதவீத சாலை விபத்துகள் குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.