ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 16 லட்சம் பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று முடிந்த வைகுந்த ஏகாதசி விழாவில் 16 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Updated on

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று முடிந்த வைகுந்த ஏகாதசி விழாவில் 16 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் நடைபெறும் விழாக்களிலேயே மிகப்பெரிய விழாவானது வைகுந்த ஏகாதசி விழா. இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என 22 நாள்கள் நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா டிசம்பா் 19-ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

அதைத் தொடா்ந்து பகல்பத்து விழா 20-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. பகல்பத்து விழாவில் நாள்தோறும் நம்பெருமாள் அா்ச்சுன மண்டபத்தில் பல்வேறு அலங்காரங்களில் பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். பகல்பத்தின் கடைசி நாளன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

இராப்பத்தின் முதல் நாளான டிச. 30-ஆம் தேதி வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. அன்று மட்டும் 1.60 லட்சத்துக்கும் அதிகமானோா் தரிசித்துள்ளதாக கூறப்படுகிறது.

பகல் பத்து, இராப்பத்து என 22 நாள்களில் ஏறத்தாழ 16 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசித்துள்ளாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com