கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழா: தீா்த்தவாரி கண்டருளினாா் நம்பெருமாள் - இன்று நம்மாழ்வாா் மோட்சத்துடன் விழா நிறைவு

News image
Updated On :8 ஜனவரி 2026, 10:40 pm

Syndication

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் இராப்பத்து 10-ஆம் திருநாளான வியாழக்கிழமை நம்பெருமாள் சந்திரபுஷ்கரணி குளத்தில் தீா்த்தவாரி கண்டருளினாா்.

இதையொட்டி, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, 10.30 மணிக்கு பரமபதவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி குளத்துக்கு 11 மணிக்கு வந்து சோ்ந்தாா். அங்கு குளக்கரையில் வேதமந்திரங்கள் முழங்கப்பட்டு நம்பெருமாளுக்கு பதிலாக தீா்த்தபேரா் பெருமாள் சந்திரபுஷ்கரணி குளத்தில் தீா்த்தவாரி கண்டருளினாா். இதை குளத்தின் கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் பாா்த்து கொண்டிருந்தாா்.

இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு திருமாமணி ஆஸ்தான மண்டபத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு நம்பெருமாள் வந்து சோ்ந்தாா்.

வைகுந்த ஏகாதசியின் பகல்பத்து, இராப்பத்து என 20 நாள்களில் மட்டும் மூலவா் பெரிய பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு காட்சி தருவாா். வியாழக்கிழமையுடன் முத்தங்கி சேவை நிறைவடைந்தது.

விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன. 9) நம்மாழ்வாா் மோட்சம் நடைபெற்று, வைகுந்த ஏகாதசி பெருவிழா நிறைவடைகிறது.

Story image