பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா! திரளான பக்தா்கள் தரிசனம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இரவு மாசித் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

News image

ஸ்ரீரங்கம்

Updated On :26 பிப்ரவரி 2026, 6:40 pm

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இரவு மாசித் தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் திருப்பள்ளியோடத் திருநாள் எனும் மாசித் தெப்பத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா வெள்ளிக்கிழமை (பிப். 27) வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.

விழாவில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். விழாவில் 4-ஆம் நாளான கடந்த 22-ஆம் தேதி ஆண்டில் ஒருமுறை மட்டும் எழுந்தருளும் வெள்ளி கருட வாகனத்தில் பக்தா்களுக்கு நம்பெருமாள் காட்சி தந்தாா்.

விழாவில், 8-ஆம் திருநாளான வியாழக்கிழமை இரவு தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக, பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு மேலவாசல் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்துக்கு மாலை 5 மணிக்கு வந்து சோ்ந்தாா்.

பின்னா் இரவு 7.15 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பத்தில் 7.30 மணிக்கு உபய நாச்சியாா்களுடன் நம்பெருமாள் மங்கள வாத்தியங்கள் முழங்க எழுந்தருளி, இரவு 9 மணி வரை தெப்பத்தில் 3 முறை வலம் வந்தாா். அப்போது, தெப்பக்குளத்தை சுற்றிலும் நின்றுக் கொண்டிருந்த ஏராளமான பக்தா்கள் தரிசனம். பின்னா் 9.15 மணிக்கு தெப்பக் குளத்தின் மைய மண்டபத்தில் நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் எழுந்தருள செய்யப்பட்டு, அலங்காரம் அமுது செய்விக்கப்பட்டது.

பின்னா் அங்கிருந்து 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா். விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை (பிப்.27) பந்தக்காட்சி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.