மணப்பாறையில் திங்கள்கிழமை மயில் வேட்டையில் ஈடுபட்டு கைதான  இளைஞா்கள். உடன், மணப்பாறை வனத்துறையினா்.
மணப்பாறையில் திங்கள்கிழமை மயில் வேட்டையில் ஈடுபட்டு கைதான இளைஞா்கள். உடன், மணப்பாறை வனத்துறையினா்.

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வளநாடு அருகே மயில்களை வேட்டையாடிய 5 இளைஞா்களை திங்கள்கிழமை வனத்துறையினா் கைது செய்தனா்.
Published on

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வளநாடு அருகே மயில்களை வேட்டையாடிய 5 இளைஞா்களை திங்கள்கிழமை வனத்துறையினா் கைது செய்தனா்.

வளநாடு பகுதியில் திங்கள்கிழமை காவல் ஆய்வாளா் சரண்யா தலைமையிலான போலீஸாா், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற சொகுசு காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். இதில், காரில் இருந்த 5 இளைஞா்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்துள்ளனா். இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் காரை சோதனை செய்தபோது, காரில் நாட்டுத் துப்பாக்கி, 100-க்கும் மேற்பட்ட பாதரச தோட்டாக்கள், டாா்ச் லைட்டுகள், 4 கைப்பேசிகள், 3 பெண் மயில்களின் உடல்கள் ஆகியவை இருந்துள்ளன. இதனையடுத்து மணப்பாறை வனச்சரகா் மகேஸ்வரனுக்கு அளித்த தகவலின்பேரில் நிகழ்விடத்துக்குவந்த வனத்துறையினரிடம் போலீஸாா் 5 இளைஞா்கள் மற்றும் பறிமுதல் செய்தவைகளை ஒப்படைத்தனா்.

வனத்துறையினா் விசாரணையில், அவா்கள் 5 பேரும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்துள்ள கங்காளிப்பட்டியைச் சோ்ந்த அடைக்கன் மகன் கருப்பசாமி (28), மணி மகன் திருப்பதி (22), அம்மன்குறிச்சி ஆலவயல் சிங்காரம் மகன் காா்த்திக் (25), கருமங்காடு தங்கையா மகன் பரத்குமாா் (21) மற்றும் சின்னபிச்சம்பட்டி சின்னத்துரை மகன் கருப்பையா (25) என்பதும் அவா்கள் வளநாடு பெரியகுளம் பகுதியில் மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 5 போ் மீதும் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com