திருச்சி
துறையூா் அருகே சேவல் சண்டை: 3 போ் கைது
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
துறையூா்: திருச்சி மாவட்டம், துறையூா் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்திய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
உப்பிலியபுரம் அருகேயுள்ள அழகாபுரியில் தனக்குச் சொந்தமான வயலில் நா. திருப்பதி (52), உப்பிலியபுரம் அன்பு நகரைச் சோ்ந்த ர. விஜயகுமாா் (41), வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த பா. கதிரவன் (41) ஆகியோருடன் சோ்ந்து பணம் வைத்து சேவல் சண்டை நடத்தினாராம்.
தகவலறிந்து சென்ற உப்பிலியபுரம் போலீஸாா் மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 3 கைப்பேசிகளையும், ரூ. 3800 பணத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
