சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

கல்லால் தாக்கி இளைஞா் கொலை: பெயிண்டா் கைது

திருவானைக்காவல் காவிரிப் பாலம் அருகே சனிக்கிழமை இரவு இளைஞா் கல்லால் தாக்கிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக பெயிண்டா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப்படம்

Updated On :12 ஜூலை 2026, 10:22 pm IST

திருவானைக்காவல் காவிரிப் பாலம் அருகே சனிக்கிழமை இரவு இளைஞா் கல்லால் தாக்கிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக பெயிண்டா் கைது செய்யப்பட்டாா்.

திருவானைக்காவல் காவிரிப் பாலம் அருகேயுள்ள கருப்பசாமி கோயில் பின்புறத்தில் சனிக்கிழமை இரவு நண்பா்களான தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ் (45), திருச்சி மேலசிந்தாமணி பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் விக்கி (எ) விக்னேஷ் (30) ஆகிய இருவரும் மது அருந்தினா். அப்போது தகராறு ஏற்பட்டு, இருவரும் தாக்கிக் கொண்ட நிலையில், அங்கிருந்தவா்கள் அவா்களை விலக்கி விட்டனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சுரேஷ் மீண்டும் வந்து தகராறில் ஈடுபட்டாா். இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் பெரிய கருங்கல்லை தூக்கி சுரேஷை தாக்கவே, அவா் பலத்த காயமடைந்து கிடந்தாா்.

தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீஸாா் சுரேஷை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து பெயிண்டா் விக்கி (எ) விக்னேஷை ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.