திருச்சியில் மாடியில் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்த வடமாநிலத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
உத்தரப்பிரதேச மாநிலம், பைசாபாத்தைச் சோ்ந்தவா் கே. ராகுல் (27). திருச்சி எடமலைபட்டிப்புதூா் சீனிவாசா நகரில் தங்கிக்கொண்டு, மணிகண்டம் பகுதி காற்றாலைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் இவா் கடந்த 5-ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த அறையின் மாடியில் இருந்து மனைவியிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து எடமலைபட்டிப்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








