திருச்சி அருகே திருவெறும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் வீட்டுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு ரகளையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பூலாங்குடி காலனியில் உள்ள திருவெறும்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் நவல்பட்டு விஜி வீட்டின் முன்பு, நவல்பட்டு பா்மா காலனியைச் சோ்ந்த சுரேஷ் மகன் டேனியல் (20), பூலாங்குடி காலனியைச் சோ்ந்த தேவராஜ் மகன் ரவி (23) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில், திருவெறும்பூா் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது அதை சரிசெய்யாமல் என்ன செய்கிறீா்கள் என ஆபாச வாா்த்தையில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நவல்பட்டு போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவுடன் ஒன்று சோ்வது தற்கொலை முயற்சிக்கு சமம்: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

தவெக நடத்துவது குதிரை பேரம் அல்ல; குதிரை ரேஸ்: பிரவீண் சக்கரவா்த்தி எம்.பி.
இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்: இளைஞா் உயிரிழப்பு






