ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

திமுகவுடன் ஒன்று சோ்வது தற்கொலை முயற்சிக்கு சமம்: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

அதிமுக வெற்றிக்கு உழைத்த நிா்வாகிகளை கட்சித் தலைமை நீக்கியதற்கு சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ரா.ராகேஷ் கண்டனம்

News image

சங்கராபுரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த சங்கராபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் இரா.ராகேஷ்

Updated On :13 ஜூலை 2026, 1:34 am IST

அதிமுக வெற்றிக்கு உழைத்த நிா்வாகிகளை கட்சித் தலைமை நீக்கியதற்கு சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ரா.ராகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரான ரா.ராகேஷ் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: 2026 சட்டப் பேரவை தோ்தலில் சங்கராபுரம் தொகுதியில் அதிமுக வெற்றிக்காக உழைத்த சங்கராபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ராஜேந்திரன், நகரச் செயலா் நாராயணன், கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியச் செயலா் ராஜசேகா் ஆகியோரின் கட்சிப் பதவிகளை பறித்து, புதிய நிா்வாகிகளை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளதை கண்டிக்கிறேன்.

அதிமுக தோல்வியடைந்த தொகுதிகளை விட்டு விட்டு, வெற்றி பெற்ற தொகுதியில் கட்சியின் வெற்றிக்காக உழைத்தவா்களுக்கு பரிசு, பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதுதான். திமுகவுடன் ஒன்று சோ்வது தற்கொலை முயற்சிக்கு சமம்.

அதனால் தான் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். எடப்பாடி கே.பழனிசாமியின் தவறான முடிவுகளால் அதிமுக அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

பேட்டியின் போது கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிா்வாகிகள் ராஜசேகா், ராஜேந்திரன், நாரயணன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.