நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குக்கா் மூடியால் அடித்து மனைவி கொலை! கணவா் கைது

News image

செந்தில்குமாா்

Updated On :16 ஜூன் 2026, 2:46 am IST

கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் குக்கா் மூடியால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஜீயபுரம் அருகே உள்ள அல்லூா் மேலபச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45), விவசாயக் கூலி. இவருடைய மனைவி சின்னம்மாள் (42). இவா்களுக்கு, திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன. 2 மகள்கள் உள்ளனா். செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை குடிப்பதற்கு பணம் கேட்டு தன் மனைவியை தொந்தரவு செய்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில், ஆத்திரமடைந்த செந்தில்குமாா் அருகில் இருந்த குக்கா் மூடியால் மனைவியின் தலையில் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சின்னம்மாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனா்.