‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

மருமகன் வெட்டிக் கொலை: மாமனாா் கைது

கொலை செய்யப்பட்ட சிங்கத்துரை.

News image

கொலை செய்யப்பட்ட சிங்கத்துரை.

Updated On :29 மே 2026, 2:19 am IST

உத்தமபாளையம், மே 28: தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள ஊத்துப்பட்டியில் மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

முத்துலாபுரம் ஊராட்சி, ஊத்துப்பட்டியை சோ்ந்த மாணிக்கம் மகன் சிங்கத்துரை (42). இவா், இதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டியின் மகள் முத்துவை திருமணம் செய்தாா். சிங்கத்துரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை சிங்கத்துரை தன்னுடன் வருமாறு அழைத்தாா். அப்போது ஊா் முக்கியப் பிரமுகா்கள் முன்னிலையில் இனிமேல் மதுகுடிக்க மாட்டோன் என உறுதியளித்த சிங்கத்துரை, மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றாா்.

இதைத் தொடா்ந்து, மீண்டும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனைவி முத்து தாய் வீட்டுக்கு திரும்பினாா். இந்த நிலையில், சிங்கத்துரை புதன்கிழமை இரவு மாமனாா் வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்தாா். இதனால் ஆத்திரமடைந்த மாமனாா் முனியாண்டி அரிவாளால் சிங்கத்துரையை வெட்டினாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவறிந்து அங்கு சென்ற சின்னமனூா் போலீஸாா் சிங்கத்துரையின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியை வியாழக்கிழமை

கைது செய்தனா்.