இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் நல தினம் கொண்டாட்டம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விமானப் பயணிகள் நல தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜூ உள்ளிட்டோா்.

Published On :16 ஜூன் 2026, 2:27 am IST

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் நல தினத்தையொட்டி திங்கள்கிழமை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் ஆண்டுதோறும் ஜூன் 15-ஆம் தேதி விமானப் பயணிகள் நல தினம் (யாத்ரி சுவிதா திவாஸ்) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் நல தின நிகழ்ச்சிகளை வந்தே மாதரம் நிகழ்ச்சியுடன் விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ்.ராஜூ தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்களில் திருச்சி வந்த பயணிகளுக்கு மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வை விமான நிலைய இயக்குநா் தொடங்கிவைத்து மரக்கன்று நடவு செய்தாா்.

மேலும், விமானப் பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விமானப் பயணிகள் மற்றும் விமான நிலைய அலுவலா்கள் கலந்துகொண்ட சிறப்பு யோகா நிகழ்ச்சி, பொது மருத்துவ முகாம், ரத்த தானம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம் மற்றும் விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி மாணவா்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விமான நிலையத்தை தூய்மையாகப் பராமரித்து வரும் தூய்மைப் பணியாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி நடைபெற்ற விமானப் பயணிகள் நல தின கொண்டாட்டத்தில் விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனப் பணியாளா்கள், பயணிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயணிகள் நல தின கொண்டாட்டம்...

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பயணிகள் நல தின கொண்டாட்டம்...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.