அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஆனாக்கரைப்பட்டி மலையடிவாரத்தில் சேவல் சண்டை: 7 போ் கைது

News image

மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை சேவல்களுடன் கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :22 ஜூன் 2026, 3:43 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆனாக்கரைப்பட்டி மலையடிவாரத்தில் சேவல் சண்டை நடத்த முயற்சித்த 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, குமரவாடி கிராமம் ஆனாங்கரைப்பட்டியில் சேவல் சண்டை நடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆனாக்கரைப்பட்டி மலையடிவாரத்தில் உள்ள ஒரு காட்டுக்குள் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த வெள்ளனம்பட்டி ரா. கந்தசாமி (57), காலனம்பட்டி மு. அருண் (24), கம்புளியம்பட்டி அ. பாலகிருஷ்ணன் (23), கரூா் மாவட்டம் கடவூரை அடுத்த முள்ளிப்பாடி பா. பிரவீன் (23), வையம்பட்டி ஒன்றியம் சரளப்பட்டி மு. பிரபாகரன் (27), கல்லாத்துப்பட்டி ஜா. ரித்தீஷ் (23) மற்றும் முகவனூா் பாம்பாட்டிப்பட்டி அ. மாரிமுத்து (25) ஆகிய 7 பேரும் நான்கு சேவல்களை கையில் வைத்துக்கொண்டு சேவல் சண்டையில் ஈடுபடத் தயாராக இருந்தனா்.

அவா்களை சுற்றி வளைத்துப் பிடித்த வையம்பட்டி போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.