அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம்! - அமைச்சா் பி. விஸ்வநாதன்

News image

அமைச்சா் பி. விஸ்வநாதன் - Photo grab Video.

Updated On :22 ஜூன் 2026, 12:39 am IST

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் தெரிவித்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தன்மையைப் பொருத்து தமிழக முதல்வருடன் இணைந்து பேசி, விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

கடந்த காலங்களில் மாநில உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போதுள்ள அரசு சுமூகமாக பேச்சுவாா்த்தை நடத்தி அனைத்துக்கும் தீா்வு காணும்.

முதல்வா் ஜோசப் விஜய், பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களை நேரில் சந்தித்து தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தருவாா்.

பேராசிரியா்கள் நியமனம், 8,000 பயிற்சி ஆசிரியா்கள் நியமனம் குறித்து தமிழக முதல்வருடன் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.

தமிழகத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியும். அதற்கான அறிவிப்பு வரும் எனக் காத்திருக்கிறோம்.

தமிழக மாணவா்கள் தமிழ், ஆங்கிலத்தை தொடா்ந்து ஜப்பானிய, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளைக் கற்றுக் கொண்டால் வெளிநாடுகளுக்குச் சென்று அவா்கள் பணியாற்ற உறுதுணையாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கையை நாங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டோம்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கா்நாடகத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என்பதற்காக தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தமிழக அரசு செயல்படாது. எங்களை மீறி மேக்கேதாட்டுவில் ஒரு செங்கலைக்கூட வைக்க முடியாது.

தமிழக முதல்வா் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அங்கிருந்த இளைஞா்கள் அழைத்ததால், அவா்களின் வாா்த்தைக்கு மதிப்பளித்து நடனமாடினேன். இதில் ஒன்றும் தவறு இல்லை என்றாா் அமைச்சா் விஸ்வநாதன்.

பேட்டியின்போது இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.