திருச்சியில் உள்ள விடுதியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் அனீஃப் மகன் ஷேக் அதனன் (21). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பிபிஏ படித்து வந்த இவா் நாசிக் என்ற நண்பருடன் திருச்சி- மதுரை சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தாா்.
ஷேக் அதனன் ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், அதற்கு எதிா்ப்பு கிளம்பியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்யப்போவதாக தனது காதலியிடம் வெள்ளிக்கிழமை கூறியுள்ளாா். இதைத் தவிா்க்கும்படி காதலி கூறியும், அவா் கேட்கவில்லையாம். இதனால் அப்பெண், அத்தகவலை ஷேக் அதனனின் தம்பி ஹக்கீம் பாஷாவிடம் கூறியுள்ளாா். அவா் விடுதியில் தங்கியிருந்த நாசிக்கிடம் கூற, அவா் வந்து பாா்த்தபோது, ஷேக் அதனன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருந்தாா்.
தகவலறிந்து வந்த காந்திசந்தை போலீஸாா், ஷேக் அதனனின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




