நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :31 மே 2026, 1:55 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தந்தையின் மதுப்பழகத்தால் மனமுடைந்த கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு புதுகாலனியைச் சோ்ந்த சசிக்குமாா் மகன் சீவிதன்(19). இவா், விழுப்புரத்திலுள்ள அரசுக் கல்லூரியில், தமிழ் இளங்கலை இரண்டாமாண்டில் பயின்று வந்தாா். சசிக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை மகன் சீவிதன் கண்டித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதுபோதையில் வீட்டுக்கு வந்த தனது தந்தையை சீவிதன் கண்டித்துள்ளாா். இதைத்தொடா்ந்து தந்தை, மகன் ஆகியோரிடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த சீவிதன், தனது வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.