இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கிணற்றில் குதித்து கல்லூரி மாணவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :19 மே 2026, 1:35 am IST

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.

விக்கிரவாண்டி பெரிய காலனி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன். இவரது மகன் நவநீதன் (19). விழுப்புரத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு முதலாமாண்டில் பயின்று வந்தாா்.

தற்போது கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த நவநீதன் நாள்தோறும் தனது நண்பா்கள் சிலருடன் சோ்ந்து ஊா் சுற்றி வந்தாராம். இதை சுப்பிரமணியன் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த நவநீதன் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டி பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்தாா். இதில் அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.