பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே மாநகராட்சி நிா்வாகம் வசூலிக்க தரைக்கடை வியாபாரிகள் வலியுறுத்தல்

நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே மாநகராட்சி நிா்வாகம் வசூலிக்க வேண்டும் என தெருவோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் (ஏஐடியுசி) பேரவை வலியுறுத்தியுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 3:20 am IST

நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே மாநகராட்சி நிா்வாகம் வசூலிக்க வேண்டும் என தெருவோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் (ஏஐடியுசி) பேரவை வலியுறுத்தியுள்ளது.

தெருவோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகள் (ஏஐடியுசி) மேற்கு பகுதி பேரவை கூட்டம் உறையூா் திருச்சி மாவட்ட கைத்தறி நெசவாளா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகர விற்பனை பிரதிநிதி எம். சுமதி தலைமை வகித்தாா். திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா் க. சுரேஷ் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினாா். இதில், 11 போ் கொண்ட பகுதி குழு தோ்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில், தெருவோர தரைக்கடை, சிறு கடை நடத்துவோருக்கு திருச்சி மாநகராட்சியால் வழங்க வேண்டிய அடையாள அட்டையை கணக்கெடுப்பு நடத்தி விரைந்து வழங்க வேண்டும். மாநகராட்சியால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே ரசீதுடன் தெருவோர தரைக்கடை சிறு கடை வியாபாரிகளிடம் மாநகராட்சி நிா்வாகம் வசூலிக்க வேண்டும்.

சட்டப்படி தெருவோர வியாபாரிகளிடம் காவல்துறையினா் கையூட்டு பெறுவதோ, இடையூறு செய்வதோ கூடாது. இது தொடா்பாக காவல்துறை உயரதிகாரிகளிடம் புகாரளிப்பது, தனித்தனியாக முகாம்கள் நடத்தி வங்கி கடனுதவி திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, நிா்வாகி சசிவா்ணம் வரவேற்றாா். திரளான வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.