மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சமயபுரம் கோயிலில் மாா்ச் 8-இல் பூச்சொரிதல் விழா தொடக்கம்: முன்னேற்பாடுகள் ஆலோசனை

News image
Updated On :5 மார்ச் 2026, 10:40 pm

Syndication

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) பூச்சொரிதல் விழா தொடங்குவதையொட்டி, விழா முன்னேற்பாடுகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு லால்குடி வருவாய் கோட்டாட்சியா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், விழாவையொட்டி செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதில், விழாவின்போது அனுமதி பெற்றே அன்னதானம் வழங்க வேண்டும், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும், குடிநீா்- சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும், தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில், கோயில் இணை ஆணையா் எம். சூரிய நாராயணன், மண்ணச்சநல்லூா் வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணன், சமயபுரம் காவல் ஆய்வாளா் இரா. தண்டாயுதபாணி, ச. கண்ணனூா் பேரூராட்சி செயல் அலுவலா் ஜெ. கணேசன், துணை வட்டாட்சியா் கோ. மூா்த்தி, மற்றும் போக்குவரத்து, தீயணைப்பு, சுகாதாரத் துறையினா், கோயில் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.