திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் பாலக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பாலக்கரை ஆலம் வீதி சந்திப்புப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
இதில் அவா், பாலக்கரை முதலியாா் சத்திரம் பகுதியைச் சோ்ந்த ஜெ.பிரபு )25) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், சலைன் பாட்டில் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள் விற்பனை: இளைஞா்கள் இருவா் கைது
போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


