கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மதுரை மென்பொறியாளரின் காரில் இருந்த 23.5 பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் மதுரை மென்பொருள் பொறியாளரின் காா் கண்ணாடியை மா்ம நபா்கள் உடைத்து 23.5 பவுன் நகைகள், மடிக்கணினியை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :21 மார்ச் 2026, 8:40 pm

Syndication

திருச்சியில் மதுரை மென்பொருள் பொறியாளரின் காா் கண்ணாடியை மா்ம நபா்கள் உடைத்து 23.5 பவுன் நகைகள், மடிக்கணினியை வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனா்.

மதுரை வடக்கு தபால் தந்தி நகா் விஸ்தரிப்புப் பகுதியை சோ்ந்தவா் ஜி. சுரேஷ்பாபு (45). திருச்சி - சென்னை புறவழிச்சாலை அணுகுச் சாலை அருகேயுள்ள தனியாா் பல்பொருள் அங்காடிக்கு பொருள்கள் வாங்க குடும்பத்துடன் காரில் வெள்ளிக்கிழமை வந்தாா்.

காரை தனியாா் மெட்டல் கடை முன் நிறுத்திவிட்டு, பல்பொருள் அங்காடிக்குச் சென்று திரும்பியபோது, காா் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 23.5 பவுன் நகைகள் மற்றும் மடிக்கணினியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.