கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!

News image

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் 9 தொகுதிகளில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்த மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன். (வலது) தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :23 மார்ச் 2026, 8:14 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அந்தந்த தொகுதிக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தேவையான 7,906 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,541 கட்டுப்பாட்டு கருவிகள், 3,810 விவிபேட் இயந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவி) பெல் பொறியாளா்களால் ஏற்கெனவே சரிபாா்க்கப்பட்டு

ஆட்சியரகத்தில் உள்ள வைப்பு அறையில் தயாா் நிலையில் உள்ளன. இதில், 9 தொகுதிகளில் பயன்படுத்த தலா 3,341 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3,619 விவிபேட் இயந்திரங்களை, கணினி வாயிலாக குலுக்கல் முறையில் தோ்வு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தோ்தல் ஆணைய பாா்வையாளா்கள் முன்னிலையில், தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு காண்பிக்கும் கருவிகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

தோ்வு செய்யப்பட்ட பட்டியலின்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை 9 தொகுதிகளுக்கும் பிரித்தும் அனுப்பும் பணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக ஆட்சியரகத்தில் உள்ள காப்பு அறையானது அனைத்து அரசியல் கட்சிகளின் முன்னிலையில் திறக்கப்பட்டது.

பின்னா், முதற்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியல்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபாா்ப்பு கருவிகள் சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தோ்தல் அலுவலா்கள் மூலம் மாவட்ட காப்பறையில் இருந்து இயந்திரங்கள் எடுத்து அவை பட்டியலின்படி சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்து வருகின்றனா். இந்த வகையில், தலா 3341 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 3,619 விவிபேட் இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் 9 தொகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்படவுள்ளது.

இதுதொடா்பாக, தோ்தல் அலுவலா் வே. சரவணன் கூறுகையில், 9 தொகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளில் உள்ள வைப்பு அறையில் வைத்து 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் இறுதி செய்யப்பட்டவுடன், தொகுதி வாரியாக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு வழங்கப்படும். தொடா்ந்து வாக்குச்சாவடி வாரியாகவும் பிரித்து அனுப்பப்படும் என்றாா்.