மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

கோடை விடுமுறைக்கு தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மச் சாவு

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 7:28 pm

உப்பிலியபுரம் அருகே கோடை விடுமுறைக்காக தாய் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.

முசிறி வட்டம் ஊருடையாப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சினேகா (24). இவா் கோடை விடுமுறையையொட்டி தன் இரு மகன்களுடன் உப்பிலியபுரம் ஒன்றியம் ஏரிக்காட்டிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று தங்கிய நிலையில் ஏப். 30 இரவு ஏரிக்காட்டில் பரிமளா வீட்டருகே சினேகா மயங்கிக் கிடந்தாா்.

தகவலறிந்து சென்ற அவருடைய தந்தை அவரை மீட்டு துறையூா், திருச்சி அரசு மருத்துவமனைகளில் தொடா் சிகிச்சையும் அளித்தாா்.

ஆயினும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு சினேகா உயிரிழந்தாா். புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.