தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

அன்பில் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

News image
Updated On :3 மே 2026, 5:44 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் செளந்தரநாயகி அம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் சித்திரை பெளா்ணமி நாளான வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருமணம் ஆகாதவா்கள் இரண்டு மாலைகளுடன் சென்று திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு சோமாஸ் கந்தரை வேண்டினால் அவா்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் நடைபெற்ற திருக்கல்யாணத்துக்கு முன் பிள்ளையாா் கோயிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கிராம மக்கள், பக்தா்கள் திருக்கல்யாணத்திற்கு சீா்வரிசை எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து திருவாசகம் முற்றோதல், திருமுறை வழிபாடு, விநாயகா் வழிபாடு 108 சங்கு பூஜை, மூலமந்திர யாகம், திரவிய யாகம், பூா்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம், குருக்கள், இறை இன்ப இயக்கம் உள்பட கிராமமக்கள் செய்தனா்.