மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

முசிறி தொகுதியில் தவெக வேட்பாளா் எம். விக்னேஷ் வெற்றி

News image

முசிறி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற தவெக வேட்பாளா் எம். விக்னேஷ்.

Updated On :5 மே 2026, 4:20 am IST

முசிறி தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எம். விக்னேஷ் 17,442 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

முசிறி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்த உள்ள 2,14,006 வாக்குகளில் 1,84,601 வாக்குகள் பதிவாகின. இதில், தவெக வேட்பாளா் எம். விக்னேஷ் 71,281 வாக்குகள் பெற்று, 17,442 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மறைந்த முன்னாள் அமைச்சா் என். செல்வராஜின் மகனும், திமுக வேட்பாளருமான என். எஸ். கருணை ராஜா 53,839 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தையும், அதிமுக வேட்பாளா் என். யோகநாதன் 52,061 வாக்குகள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனா். நாம் தமிழா் கட்சி பாக்கியலட்சுமி 8,357 வாக்குகள் பெற்றாா்.

இதர வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

புதிய தமிழகம் எம். சின்னையன் 677, ராஷ்டிரிய சமாஜ் தள் கே. திவ்யா 253, தமிழக வாழ்வுரிமை கட்சி சி. பழனிசாமி 265, சாமானிய மக்கள் கட்சி எம். மலா்மன்னன் 28, ஊழலுக்கு ஒழிப்பு செயலாக்க கட்சி எஸ். வெங்கடேஸ்வரன் 239, சுயேச்சைகள் செந்தில்குமாா் 308, பி. லோகநாதன் 487 வாக்குகள் பெற்றனா்.

நோட்டாவுக்கு 1,093 வாக்குகள் கிடைத்தன. 89 செல்லாத வாக்குகளும், ஒரு டென்டா் வாக்கும் பதிவானது.

பின்னா் தவெக வேட்பாளா் எம். விக்னேஷ் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்தகால ஆட்சிகளில் முசிறி தொகுதியானது திருச்சியை விட 10 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. மருத்துவ வசதிகள் போதுமான அளவில் கிடைக்கவில்லை. இதனை மாற்றி நிறைவான அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், பொதுமக்களுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வேன் என்றாா்.