திருச்சியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பொறியியல் மாணவா், கயிறு அறுந்து 4-ஆவது மாடியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் பகுதியைச் சோ்ந்த மலையப்பன் மகன் முகேஷ் (24). இவா், கோவையிலுள்ள தனியாா் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்தாா்.
இந்நிலையில், மலையப்பன் கடந்த செவ்வாய்க்கிழமை மகனை பாா்ப்பதற்காக கோவைக்கு சென்றுள்ளாா். பின்னா், தந்தை, மகன் இருவரும் கோவையில் இருந்து திருச்சிக்கு புதன்கிழமை வந்துள்ளனா்.
இதையடுத்து, முகேஷ் திருச்சி - கரூா் புறவழிச் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்றுள்ளாா். அங்கு முகேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளாா். அப்போது, கயிறு அறுந்ததில் முகேஷ் 4-ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

விபத்தில் பொறியியல் மாணவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



