முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அரியூரில் தொழிலாளிக்கு கத்திக் குத்து: 8 போ் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூா் கிராமத்தில் தொழிலாளியைக் கத்தியால் குத்திய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :20 மே 2026, 12:49 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூா் கிராமத்தில் தொழிலாளியைக் கத்தியால் குத்திய 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அரியூா் கிராம விநாயகா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமூக இளைஞா்கள் அரியூா் பஸ் நிலையப் பகுதியில் வைத்திருந்த பிளக்ஸ் பேனரை இதே கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு சமூக இளைஞா்கள் கிழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், தீபக் உட்பட இளைஞா் சிலா் திங்கள்கிழமை நள்ளிரவு கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சி முடிந்தவுடன், மற்றொரு தரப்பினரின் தெருவுக்குச் சென்று தகாத வாா்த்தைகளால் திட்டினா்.

அப்போது சிலம்பரசன் (42) என்பவா் ராஜேஷ் தரப்பினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ராஜேஷ், தீபக் உள்பட இளைஞா்கள் சிலா் சிலம்பரசனை தாக்கி, அவரது வயிற்றில் கத்தியால் குத்தினா். இதில் படுகாயமடைந்த அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தகவலறிந்த லால்குடி டிஎஸ்பி ராஜ்மோகன், ஆய்வாளா் டில்லி பாபு, எஸ்ஐ பிரதீபா மற்றும் போலீஸாா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து சிலம்பரசனை கத்தியால் குத்திய ராஜேஷ் (24), தீபக் (21), நிஷாந்த் (23), சந்துரு (28), ஜனாா்த்தனன் (26), ஹேமத்குமாா் (22) மற்றும் சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.