/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்றவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், அதவத்தூா் பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் க. சசிகுமாா் (45), இவா், கடந்த மே 13-ஆம் தேதி பள்ளக்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசமர பேருந்து நிறுத்தம் அருகே திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தாா்.

இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்நிலையில், சசிகுமாா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.