திருச்சியில் வடமாநில வியாபாரியைத் தாக்கிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உத்தர பிரதேஷ மாநிலம் மீரட்டைச் சோ்ந்தவா் ஆா். அமன் மஹாஜன் (37). மீரட்டில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலையம் நடத்தும் இவா், மீரட்டில் இருந்து திருச்சி தென்னூா் அண்ணா நகரில் உள்ள அதே பகுதியைச் சோ்ந்த எஸ். தாஜுதீன் (31) என்பவருக்கு சொந்தமான தாஜ் விற்பனை நிலையத்துக்கு விளையாட்டு உபகரணங்களை அண்மையில் அனுப்பிவைத்தாா்.
இந்நிலையில், அதற்கான பணத்தைப் பெறுவதற்காக அமன் மஹாஜன் கடந்த சனிக்கிழமை தாஜ் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை நிலையத்துக்கு வந்தாா்.
அப்போது தாஜுதீன், இவரது சகோதரா் எஸ். ரிஸ்வான் (25) ஆகிய இருவரும் சோ்ந்து விளையாட்டு உபகரணங்கள் வாங்கியதற்கான பணத்தைத் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரைத் தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தனா்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அமன் மஹாஜன் கடந்த சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரித்து, தாஜுதீன், ரிஸ்வான் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

இளைஞரை தாக்கிய 4 போ் கைது
இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது
மனைவியைத் தாக்கிய கணவா் கைது

வீட்டுமனை தகராறு: விவசாயி கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



