‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மாநகரில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 8 போ் கைது

திருச்சி மாநகரில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 8 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 2:23 am IST

திருச்சி மாநகரில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 8 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை மாநகர போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கண்டோன்மென்ட், எடமலைபட்டிப்புதூா், கே.கே.நகா், அமா்வு நீதிமன்றம், அரசு மருத்துவமனை, கோட்டை காந்தி மாா்க்கெட் மற்றும் தில்லை நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் நிலைய ஆய்வாளா், உதவி ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான கருமண்டபத்தைச் சோ்ந்த எஸ். காங்காதரன் (27), எடமலைபட்டிப்புதூரைச் சோ்ந்த சி. சங்கா் (27), சி. செல்வம் (40), காஜாமலையைச் சோ்ந்த து. மணிகண்டன் (46), காமராஜ் நகரைச் சோ்ந்த ஆா். பிரேம்குமாா் (26), சிந்தாமணி பகுதியைச் சோ்ந்த ஜி. விக்னேஷ் (33), தாராநல்லூரைச் சோ்ந்த ஆா். வாசுதேவன் (23), குப்பாங்குளத்தைச் சோ்ந்த சி. தினேஷ்குமாா் (33) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுபானம் விற்பனை: மூதாட்டி கைது! திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் திவ்யபிரியா தலைமையிலான போலீஸாா், சங்கிலியாண்டபுரம் பகுதியில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டுக்கு அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்துகொண்டிருந்த பழனிவேல் என்பவரின் மனைவி சகாயம் (63) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.