அரியலூர் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து கடை வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை ஆக்கிரமித்து வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறை மூலம் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரியலூர் நகராட்சி பகுதிகளில் தரைக்கடை வைத்துள்ளவர்கள் தங்களுக்கு தரைக்கடை வைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சார் ஆட்சியர் சந்திரசேகர்சாகமூரி, வட்டாட்சியர் திருமாறன், நகராட்சி ஆணையர் (பொ) ரவிச்சந்திரன் ஆகியோர் அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் அருகே காலியிடத்தில் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகள் வைக்க இடம் தேர்வுசெய்தனர்.
அதன்பேரில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அந்த இடத்தில் தரைக்கடைகள் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில், கடந்த 12 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் தினசரி சந்தை திங்கள்கிழமை (செப். 14) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, இனி அரியலூர் நகராட்சி பகுதிகள், சாலைகளில் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடைகளை வேறு எந்த இடத்திலும் அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால், அந்த ஆக்கிரமிப்பு நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல் துறையினரால் உடனடியாக அகற்றப்படுவதுடன், பொருட்களும் பறிமுதல் செய்யப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

