சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஆண்டிமடம் அருகே மாமனாரைத் தாக்கிய ஆசிரியர் கைது

: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மாமனாரைத் தாக்கிய ஆசிரியர் ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டார்.

Updated On :

: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே மாமனாரைத் தாக்கிய ஆசிரியர் ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டார்.

ஆண்டிமடம் அருகே உள்ள ரெட்டிதத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் புதியராஜா (32). இவர், ஜமீன் குளத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், வரதராஜன் பேட்டை சாமிநாதன் மகள் ஜூலி மெட்டில்டாவுக்கும் திருமணம் ஆகி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆக. 23 அன்று புதியராஜா வரதராஜன் பேட்டைக்கு சென்று தனது மாமனாரிடம் தனது குழந்தையைப் பார்க்க வந்ததாக கூறினாராம். அதற்கு அவர் குழந்தையைப் பார்க்க முடியாது எனக் கூறியிருக்கிறார். இதனால் அவரிடம் தகராறு செய்து மாமனாரைத் தாக்கினாராம். இதுகுறித்து சாமிநாதன் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் வழக்குப்பதிந்து புதியராஜாவை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.