அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற அவசரக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் மீனாள் சந்திரசேகர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஆர். செல்வராஜ், ஆணையர் நவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நகராட்சிக்கு 2.5 கோடி ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டும் திட்டப் பணிக்கு அனுமதி அளித்தல், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 50 லட்சம் மதிப்பில் வார சந்தைக்கான கடைகள் கட்டுதல், 1 கோடி ரூபாய் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நகராட்சி ஆணையருக்கான குடியிருப்பு கட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் மூர்த்தி, சுப்பிரமணியன்,இதயத்துல்லா,வேல்முருகன்,சத்யா,இந்திரா,முத்துலட்சுமி,பானுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.