செந்துறை அருகே உள்ள நல்லாம்பாளையம் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி திருமுருகன் தலைமை வகித்து தொடங்கி வைத்த முகாமில், சென்னை திருநங்கைகள் கலைக்குழுவினர் மற்றும் பெரம்பலூர் ரோவர் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நாடகத்தின் மூலம் கழிப்பறையின் பயன்பாடு குறித்து விளக்கிக் கூறினர்.
வேளாண் கல்லூரி மாணவி செல்விபாரதி, அரசின் மானியம் பெற்று தனிநபர் கழிப்பறை கட்டிக்கொள்ளும் திட்டத்தினை பயன்படுத்தி கழிப்பறையில்லா வீடுகள் அனைத்திலும் கழிப்பறைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றதோடு, மனிதக்கழிவுகளை மக்கச்செய்து விவசாயத்துக்கு பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்றார்.
ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமார் வரவேற்றார். முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகர், சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் மற்றும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

