இந்து முன்னணி  செயற்குழு கூட்டம்

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் ஜயங்கொண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் ஜயங்கொண்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஜயங்கொண்டம் ஒன்றியத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ரமேஷ், ராஜா, திருமூர்த்தி உள்ளிட்ட அரியலூர் பெரம்பலூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு அனைத்து இந்து கோயில்களிலும் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடத்தக்கூடாது. மேலும் சிறப்பு வழிபாட்டுக்காக நடை திறக்கக் கூடாது மீறி பூஜைகள் செய்தாலோ, நடை திறந்தாலோ அதனை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. கூட்டத்தின் இறுதியில் செந்துறை ஒன்றியத் தலைவர் சபரிராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com