வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலிப் பணியிடங்கள்:தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று  முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி. சுமதி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:28 am

DIN

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று  முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி. சுமதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் இளநிலை நிர்வாக உதவியாளர்  பணியிடத்தில் 2 இடங்களும் ( எம்.பி.சி -1, பி.சி- 1), இளநிலை நிர்வாக உதவியாளர்  கணினி ஆபரேட்டர் (பொது -10,   அலுவலக உதவியாளர் ( எம்.பி.சி-1) ஆகிய பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பம்,கல்வித்தகுதி,விண்ணப்பிக்கும் முறை,இன ஒதுக்கீடு,வயது வரம்பு, இதர தகுதிகள்,விதிமுறைகள், ஊதிய விவரங்கள் அனைத்தும் ‌h‌t‌t‌p://‌e​c‌o‌u‌r‌t‌s.‌g‌o‌v.‌i‌n/‌t‌n/​a‌r‌i‌y​a‌l‌u‌r என்ற இணையதளத்தில் உள்ளது.
இந்த இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவர், அரியலூர் என்ற முகவரிக்கு இம்மாதம் 10 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.