11 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் 11 ஊராட்சிகளில் வரும் 19, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.


அரியலூர் மாவட்டத்தில் ஏழை பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் 11 ஊராட்சிகளில் வரும் 19, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-18 ஆம் நிதியாண்டில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விலையில்லா வெள்ளாடுகள் கொள்முதல் செய்து, பயனாளிகளுக்கு வழங்கப்படும். எனவே, மாவட்டத்தில் இலுப்பையூர், இலந்தைக்கூடம், கீழகாவட்டாங்குறிச்சி, இடையக்குறிச்சி, இலையூர், இளையபெருமாள் நல்லூர், எரவாங்குடி, சோழமாதேவி, எடங்கன்னி, அயன்தத்தனூர் மற்றும் இரும்புலிக்குறிச்சி ஆகிய 11 கிராம ஊராட்சிகளில் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு கிராம சபைக் கூட்டங்கள் மூலம் நடைபெற உள்ளது. அதன்படி, வரும் 19 ஆம் தேதி அன்று முதல் சிறப்பு கிராம சபை கூட்டமும், 28, 29 ஆகிய தேதிகளில் இரண்டாவது சிறப்பு கிராம சபை கூட்டமும் நடைபெறுகிறது. எனவே, இத்திட்டத்தில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மனு அளித்து பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...