பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நீரோடையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வலியுறுத்தல்

செந்துறை அருகே தனியார் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள நீரோடையை மீட்டு தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:39 pm

DIN

செந்துறை அருகே தனியார் சிமென்ட் ஆலை ஆக்கிரமித்துள்ள நீரோடையை மீட்டு தரவேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் செந்துறை ஒன்றியச் செயலர் இரா.ராயர், நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:  கீழப்பழுவூர் அருகே உள்ள தனியார் சிமென்ட் ஆலையின் சுண்ணாம்புக் கல் சுரங்கத்துக்கு உள்ளே செல்லும் வழியில், மிகப்பெரிய நீரோடை உள்ளது. மழைக் காலங்களில் மழை நீர் இதன் வழியாகச் சென்று அங்குள்ள பெரிய ஏரியை நிரப்பும். 
இந்த ஏரியை நம்பி அப்பகுதி விவசாயிகள், பயிர் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், இந்த நீரோடையை தனியார் சிமென்ட் ஆலை-சுண்ணாம்புக் கல் சுரங்கத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை  மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.