47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மீனவர்களுக்கு 50 சதவீத மானியத்தில் மீன்பிடி வலை, பரிசல்கள்: நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐம்பது சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையினாலான பரிசல்கள் பெற விருப்பமுடைய மீனவர்கள், வரும் 20-ஆம்

News image
Updated On :16 நவம்பர் 2017, 12:24 am

DIN

ஐம்பது சதவீத மானியத்தில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையினாலான பரிசல்கள் பெற விருப்பமுடைய மீனவர்கள், வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 2017-18 ஆம் ஆண்டில் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையினாலான பரிசல்கள் 50 சதவீத மானியத்தில் பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட -பழங்குடியினருக்கு 16.62 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். பங்கு மீனவர்கள் / முழுநேர உள்நாட்டு மீனவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தில் ஏற்கெனவே பயன்பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் ஆவர்.
விருப்பமுள்ள உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அரியலூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண்:234, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரியலூர் என்ற முகவரியிலும்,  04329-228699 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.