அரியலூர் அருகே வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் மறியல்
அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியை அடுத்த கடுகூர் கிராமத்தில் பாரபட்சமின்றி அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு


அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியை அடுத்த கடுகூர் கிராமத்தில் பாரபட்சமின்றி அனைவருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அந்த திட்ட பணியாளர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடுகூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய ஊராட்சியாக இருப்பதால், பணியாளர்களை இரு குழுவாக பிரித்து,ஒரு குழுவினர்களுக்கு இன்றும்,மற்றொரு பிரிவு குழுவினர்களுக்கு மறுநாளும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக ஒரு குழுவினருக்கு மட்டும் வேலைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வேலையில்லாமல் அவதிப்பட்டு வந்த மற்றொரு குழு பணியாளர்கள்,அனைவருக்கும் வேலைவாய்ப்புகள் வழங்க வலியுறுத்தி இரண்டு அரசுப் பேருந்துகளை சிறை பிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கயர்லாபாத் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...