காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் (ஐஜேகே) சார்பில் தஞ்சையில் ஏப்ரல் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதன் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
அரியலூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த அழுத்தம் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம். காவிரி விவசாயத்துக்கும், 11 மாவட்ட மக்களின் குடிநீருக்கும் பயன்படுகின்றது. 25 லட்சம் ஏக்கர் காவிரியை நம்பியுள்ளது. முன்பு 3 போக விவசாயம் பார்த்த நிலையில், தற்போது ஒருபோகத்துக்கே வழியில்லை. முன்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதுபோல் தற்போது காவிரிக்காக அனைவரும் போராடி வருகின்றனர்.
மத்திய அரசு கர்நாடக தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, வரும் 13 ஆம் தேதி தஞ்சையில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
ரஜினிகாந்த் 173 படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


