ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

ரூ.52.77 லட்சத்தில் நல உதவிகள் வழங்கல்

அரியலூர் மாவட்டம் ஆட்சியரக அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.52 லட்சத்து 77 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :9 ஏப்ரல் 2018, 3:04 am

அரியலூர் மாவட்டம் ஆட்சியரக அலுவலகத்தில் வேளாண் துறை சார்பில் ரூ.52 லட்சத்து 77 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு. விஜயலட்சுமி தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் பங்கேற்று, அரியலூர் மாவட்டத்துக்குட்பட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் கூட்டுப்பண்ணையம் திட்டத்தின் கீழ் 9 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்காக மானியத்தொகையும், மேலும் 3 டிராக்டர், 1 மினி டிராக்டர், 5 சுழற்கழப்பை, 13 பவர் டில்லர் என 22 வேளாண் இயந்திரங்கள் என ரூ. 52 லட்சத்து 77 ஆயிரத்து 981 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் எம்எல்ஏ.ராமஜெயலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் சே. தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கே. லோகேஷ்வரி, வேளாண் துணை இயக்குநர்  பழனிசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அன்புராஜன், வேளாண் அலுவலர் வடிவேல் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.