எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முந்திரி தொழிற்சாலையில்  மே தினக் கொண்டாட்டம்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் முந்திரி தொழிற்சாலையில் அரியலூர் மாவட்ட சட்டப் பணிக்குழு மற்றும் வட்ட சட்டப்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:40 am

DIN

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தனியார் முந்திரி தொழிற்சாலையில் அரியலூர் மாவட்ட சட்டப் பணிக்குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மே தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், ஜயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு  தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதியுமான பாரதிராஜா பங்கேற்று, மே தின சிறப்பு,  தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உரிமைகள் குறித்து விளக்கினார். மேலும் அவர், தொழிலாளர்களுக்கான நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், தொழில் செய்யும் இடத்தில் வசதிகள், அனைவருக்கும் சமநீதி பெறுவதற்கு வசதியோ, பணமோ தடையில்லை எனத் தெரிவித்தார். 
வழக்குரைஞர்கள் உத்திராபதி, மாசிலாமணி, வேல்முருகன், ஜயங்கொண்டம் நீதிமன்ற ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
முடிவில் மேலாளர் முரளி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.