அரியலூர் மாவட்டம், திருமானுர் அருகே கரைவெட்டி பரதூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஒருவர் உயிரிழந்தார், 28 பேர் பலத்த காயமடைந்தனர்.
முதலில் கோயில் காளைகளும், பின்னர் திருச்சி, பெரம்பலூர், அரியலூர்,தஞ்சாவூர், புதுக்கோட்டை,சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 600 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் முட்டி 28 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் பலத்த காயமடைந்த திருப்பெயர் சக்திவேல் (32), நத்தம் பிரகாஷ் (18), கரைவெட்டி கணேசன் (32), வல்லம் கோவிந்தன்(35), சாத்தமங்கலம் தமிழ்ச்செல்வன்(38), இருங்களூர் தவமணி (24) உள்ளிட்ட 9 பேர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஜ
ல்லிக்கட்டில் தனது காளையை கயிறு போட்டு பிடிக்க காளைகள் ஓடும் வழிதடத்தில் கடைசியில் கயிற்றுடன் நின்றிருந்த திருமழப்பாடியைச் சேர்ந்த சின்னப்பா (54), அவிழ்த்துவிடப்பட்ட வேறொரு காளை முட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். போட்டியில் காளையை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழு சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

