சென்னையில் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள மாநிலத் திறன் மாநாட்டில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் சென்னை கிண்டியில் உள்ள அட்வான்ஸ்டு டிரைனிங் இன்ஸ்டிடியூட் மையத்தில் மாநிலத் திறன் மாநாடு வருகிற சனி (ஜூன் 9), ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 10) நடைபெற உள்ளது. மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் மாநாட்டில், மாவட்ட திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படும்.
வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அலுவலர்கள், பல்வேறு தொழில் கூட்டமைப்புகள், செக்டார் ஸ்கில் கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோர் கொண்ட குழு திறன் படைப்புகளை மதிப்பீடு செய்யும். இதில், தேர்வு செய்யப்படும் படைப்புகளில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். தொழில் நிறுவனங்களின் படைப்புகள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த பதாதைகள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. தமிழ்நாட்டின் திறன் சூழல், திறன் முனைப்புகள், வாய்ப்புகள், உலக அளவிலான திறன் பயிற்சி குறித்த சிறந்த நடைமுறைகள் ஆகிய தலைப்புகளில் துறை வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கங்கள் நடத்தப்படுகிறது.
மாநாட்டை தொடர்ந்து ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில் தனித்திறன் தேடும் நிகழ்வுகள், கிண்டி, அம்பத்தூரில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், கிண்டியில் உள்ள அட்வான்ஸ்டு டிரைனிங் இன்ஸ்டிடியூட் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர் 1997 ஜனவரி 1ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். திறன் தேடலில் பங்கேற்க விரும்பும் தகுதியானவர்கள் www.tnskillshunt.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே, மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் தனி திறன் தேடலில் நேரடியாக பங்கேற்கலாம். மாநில அளவில் நடத்தப்படும் தனி திறன் தேடலில் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஜூன் 21, 23ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் மண்டல திறன் போட்டியிலும், புதுதில்லியில் நடைபெறும் தேசிய திறன் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறுவர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!

தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!
நியூயார்க் மேயர் வெறுப்பைப் பரப்புகிறார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


