அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக் கரையின் வட புறம் அமைந்துள்ள செல்லியம்மன் கோயிலில் 27 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, காலை 6 மணிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வரப்பட்டு வீதிகளில் பக்தர்கள் வலம் வந்தனர்.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பால் குடம், பால் காவடி, அக்னி சட்டி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாதாரனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி இரவு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், தீபாதாரனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் அம்மன் மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியுடன் வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள்தோறும் மாவிளக்கு போட்டும், தீபாதாரனை காண்பித்தும் வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு

குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு கிடைக்கும்: திமுக வேட்பாளா்

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு

தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மத்திய அமைச்சா்கள் மூலம் பணம் கடத்தல்- மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

